இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக
இடம் பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வு.
பொங்கல் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொங்கல் தின நிகழ்வு சனிக்கிழமை(18.01.2025) கொட்டும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு சாரணியர் சங்கத்தின் தவிசாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
அதிதிகள் கலாசார முறைப்படி அழைத்துவரப்பட்டதன் பின்பு பொங்கல் தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து சாரணியர் அமைப்பினர் இந்த பொங்கல் தின நிகழ்வில் கலந்து கொண்டதுடன் 25 பானைகள் வைத்து பொங்கல் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
தொடர்ந்து பொங்கல் பானைக்கு அரிசி இடும் நிகழ்வு அதிதிகளால் முன்னெடுக்கப்பட்டதன் பின்பு கலை, கலாச்சார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.
இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இடம் பெற்ற இப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜேமுரளிதரன் கலந்து கொண்டிருந்ததோடு, மேலும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.ரவிராஜ், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பார்த்திபன ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment