கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ்
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதி சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு.
அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிரதான நீதிமன்ற கட்டிட தொகுதிவளாகம் சுத்தப்படுத்தும் பணிகள் திங்கட்கிழமை (20.01.2024) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் மற்றும் மட்டக்களப்பு விசேட அதிரடிப்படையினர், மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் இன்றைய தினம் பாரிய சிரமதான பணியொன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன.
ஜனாதிபதியின் கிளீனிங் சிறிலங்கா வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை மட்டக்களப்பு பிரதான நீதிமன்ற கட்டிட தொகுதிவளாகமும், அதனை அண்டிய பிரதேசங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்டத்தில் நிலவும் சீர்றர கால நிலையை அடுத்து டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்கும் வகையில் நீதிமன்ற கட்டிட வளாகம் முற்றாக பாதுகாப்பு படையினரால் இங்கு சுத்தப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ்
கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகனவின் ஆலோசனை கீழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்
அத்தியட்சகர் லலீத் லீலாரத்னவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக சிரேஸ்ட
பொலிஸ் பரிசோதகர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் இந்த சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கழிவுகள் அற்றப்பட்டதுடன் வடிகான்களும்
தூய்மைப்படுத்தப்பட்டன.
0 Comments:
Post a Comment