மட்டக்களப்பில் 3 ஆசனங்ளை நாங்கள் கைப்பற்றுவோம் - தேசிய மக்கள் சக்தி.
ஞாயிற்றுக்கிழமை(27.10.2024) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்....
எமது கட்சியின் தலைவரும் ஜனாதிபதி அனுரகுமார
திசாநாயக்கா தோழர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத் தேர்தலில் நான் மட்டக்களப்பு
மாவட்டத்தில் அபேட்சகராக போட்டியிடுகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் பெரும் வெற்றி அடைந்து ஜனாதிபதி அவர்களின் கரத்தை பலப்படுத்துவதோடு, நாட்டின் எதிர்கால நலனுக்கான சகல திட்டங்களும் அழகான, நாடு வளமான பிரதேசம், ஒரிமைப்பாடு, சமத்துவம், என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்ப நாங்களும் மக்கள் சேவகனாக இருந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்பி ஒரு சிறந்த நாடாகவும் சிங்கப்பூரை விட சிறந்த நாடாகவும் அழகான நாடாகவும் அமைப்பதற்கு எங்கள் தலைவரின் அனுசரணையுடன் நாங்கள் பின்பற்றி செல்வோம்.
பெரும்பான்மையான வாக்குகளை பெற்று அதாவது ஆகக் கூடிய 176 ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை எமது கட்சி அமைக்கும். அதற்கு எமது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்த வகையில் நாங்களும் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மக்களும் அதற்கான ஆதரவுகளை வழங்கி எங்களை உற்சாகப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கின்றோம். இப்பகுதி மக்களின் சேவையே மகேசன் சேவை எங்களது சேவையை மக்கள் சேவை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நாங்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை எமது கட்சி நிச்சயமாக கைப்பற்றும் எமது சிந்தனையும் அதான் எமது கட்சியின் தலைவரான தோழர் அனுரகுமார திசநாயக்க அவர்களின் பனிப்புமாகும் அதுதான் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment