அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை புதன்கிழமை தாக்கல் செய்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை(09.10.2024) அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
மக்கள் போராட்ட முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கட்சியின் தலைமை வேட்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தலைமையில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் சங்கு சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் 3சுயேச்சை குழுக்களும் 4 அரசியல் கட்சியும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment