களுதாவளை மகாவித்தியலயம் தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவின் நிலைப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியலயம் தேசிய பாடசாலையில் கவின் நிலையப் போட்டிகள் நடைபெற்றன.
தரம் 6 தொடக்கம் கல்விப் பொதுத்தர உயர்தரம் வரையில் அமைந்துள்ள மாணவர்களிடையே இப்போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது பாடசாலைச் சூழலில் கிடைக்கின்ற வளங்களைக் கொண்டு வகுப்பறைகள் அழகுபடுத்தப்பட்டதோடு, கற்றல் கற்பித்தலுக்குரிய வசதி வாய்ப்புக்களும் அனைத்து வகுப்பறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்போட்டி நிகழ்வில் முதலிடங்களைப் பெற்ற வகுப்புக்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டுடதோடு, ஏனையோருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், மற்றும் பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டி நிகழ்விற்குரிய அனைத்து பரிசுகளையும் அப்பாடசாலையில் 2000 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தர சாதரண தரத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment