அரச உத்தியோகஸ்த்ர்களுக்கு வேட்பாளர் சிறிநேசன் வழங்கும் அவசர அவசிய ஆலோசனை.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை(20.10.2024) இரவு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
வாக்களிப்பது என்பதைவிட உங்களது வாக்குச் சீட்டுக்களை நிராகரிக்க செய்வதற்கு ஏற்ற விதத்தில் சில மோசடிகளும் நடைபெறுவதுண்டு. அந்த நிலையில் அந்த வாக்குப் பதிவு நடைபெற்ற பின்னர் தபால் உறையில் போடப்பட வேண்டும். அதன் பின்னர் அதற்குரிய ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாதவிடத்து அந்த வாக்கு சீட்டுக்கள் வெளியில் எடுக்கப்பட்டு சில மோசடிகள் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றன. உண்மையில் கட்சி முகவர்கள் இந்த விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டி இருக்கின்றது. என்பதை கூறிக்கொள்கின்றேன்.
கடந்த 2020 தேர்தலில் ஏற்பட்ட சில முறையீடுகள், மோசடிகள் பற்றிய படிப்பினை காரணமாக இந்த விடயத்தை கூறிக்கொள்கின்றேன். மேலும் நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் தமிழரசு கட்சிக்கான வீட்டுக்கு சின்னத்துக்கும் எனது ஆறாவது இலக்கத்திற்கும் அளிக்குமாறு வேண்டும் என மிகவும் உரிமையுடனும் வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நேரத்தில் பரப்புரை காரணமாக நீங்கள் தவறான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது. இந்த பரப்புரையின்போது வாக்குகளை ஈர்த்துக் கொள்வதற்காக மதுசாரம், இலஞ்சப் பணம், உணவு பார்சல், போன்ற சலுகைகளை கையூட்டலாக வழங்கி உங்களுடைய வாக்குகளை களவெடுத்துக் கொள்வதற்கு அல்லது வசீகரித்துக் கொள்வதற்கு விரும்புகின்றார்கள்.
எனவே இந்த விடயத்தில் நீங்கள் அவ்வாறான மோசடியானவர்களின் வலைகளிலிருந்து தப்பி பிழைக்க வேண்டும். தற்போது கள்ள நோட்டுக்களைக்கூட அடுக்கி வைத்திருக்கின்றார்கள். போன்ற செய்திகளும் வெளிவந்திருக்கின்றன. கள்ள நோட்டுகளை அடிப்பவர்கள் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்களும் குறிப்பிட்டதொரு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் கள்ளநோட்டுகளை தந்தும்கூட உங்களுடைய
வாக்குகளை காவு கொள்வதற்கு சில கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே இவ்வாறான குற்ற செயல்கள் செய்கின்றவர்களில் கட்சிகளின் மீதும் நீங்கள் விழிப்பாக
இருக்க வேண்டும். தயவு செய்து ஊழல் மோசடி இலஞ்சம் கையூட்டு இல்லாத ஒரு மதுசார பாவனை
இல்லாத ஒரு தேர்தலுக்கு உங்களை தயாராகிக் கொள்ள வேண்டும் என நேரத்தில் ஆலோசனையை தெரிவித்துக்
கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவிக்கின்றார்.
0 Comments:
Post a Comment