தலைவர் அனுரகுமார திசநாயக்கா அவர்களின் நாட்டின் மறுமலர்ச்சிக்கான செயற்திட்டத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மறுமலர்ச்சியும் எதிர்கால வளர்ச்சியையும் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், தொழில்வாய்ப்பு, போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கு எமது கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா அவர்களின் நாட்டின் மறுமலர்ச்சிக்கான செயற்திட்டத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தேசிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்குரிய அதிகாரமளிக்கப்பட்ட முகவர் இ.தவஞானசூரியம் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பில் மக்களைத் தெழிவுறுத்தும் கூட்டம் மட்டக்களப்பு செட்டிபாளையம் பொது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(07.10.2024) மாலை இடம்பெற்றது. இதன்போது காலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர் குமாரசாமி கணேசலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அனுராத, குருணாகல் மாவட்ட இணைப்பாளர் ஜெயசூரிய, மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின்போது தாம் விரும்பும் நபர் ஒருவரை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியினூடாக பட்டிருப்புத் தொகுதியிலிருந்து வேட்பாளராக தெரிவு செய்யவேண்டும் என அக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்த கட்சியின் பிரமுகர்களிடம் தெரிவித்தனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்த தவஞானசூரியம் …..கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது சகோதரர் அனுரகுமார திசாநாயக்கா அவர்களை மக்கள் ஆதரித்து எவ்வாறு வெற்றி பெற வைத்தார்களோ அவ்வாறு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கையை பலப்படுத்தவதற்காக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரிக்க வேண்டும்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திசைகாட்டி சின்னத்துக்கு மக்கள் வாக்களித்து அக்காட்சியில் போட்டியிடுகின்ற உறுப்பினர்களையும் ஆதரித்து அவர்களை வெற்றியை உறுதிப்படுத்தும் பட்சத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் சிறந்த சேவைகளை செய்யக்கூடிய வாய்ப்பை அந்த கட்சி உருவாக்கி கொடுக்கும். இதன் மூலம் நமது மாவட்ட மக்கள் மேலும் வளம்பெற முடியும்.
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து ஒற்றுமையாக முரண்பாடுகள் இன்றி எந்த கருத்து வேறுபாடுகளும் இன்றி ஒன்றுபட்டு செயல்படுவதுதான் நமக்கு பலம். இதனை எமது மக்கள் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் காண்பிக்க வேண்டும்.
இதன் மூலம் நமது மட்டக்களப்பு மாவட்டத்தின் மறுமலர்ச்சியும் எதிர்கால வளர்ச்சியையும் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் தொழில் வாய்ப்பு, போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கு எமது கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா அவர்களின் நாட்டின் மறுமலர்ச்சிக்கான செயற்திட்டத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மறுமலர்ச்சியும் எதிர்கால வளர்ச்சியையும் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் தொழில் வாய்ப்பு, போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கு எமது கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா அவர்களின் நாட்டின் மறுமலர்ச்சிக்கான செயற்திட்டத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment