மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - திருவள்ளுவர் சிலை திறப்பு.உலகத் தமிழ் இலக்கிய மாநாடு இன்று மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகியது.
முதலில் மட்டக்களப்பு மாநகரில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாக அமைந்துள்ள சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மான்மியத்தையும், வளங்களையும், பண்பாடுகளையும் பிரதிபலிக்கும் முகமாக கலைஞர்களினதும் மாணவர்களினதும் பண்பாட்டு பவனி கல்லடி பாலத்தருகில் இருந்து வெபர் மைதானம் வரையில்இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலகத் தமிழ் கலை இலக்கிய கருத்தரங்கத் தலைவர் முனைவர் க.சுபஷினி, மலேசியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணன், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கல்லாறு சதீஸ், கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கியவாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பாடசாலைமாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், தமிழ் சங்க உறுப்பினர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment