சிறுவர்களின் பிரச்சனைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி.
கடந்த திங்கட் கிழமை ஆரம்பமான பயிற்சியுடன் கூடிய இச்செயலமர்வு புதன்கிழமை (31) வரை இடம் பெற்றது.
சிறுவர் உரிமைகள், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணை அறிக்கையிடல், சிறுவர் வன்முறைக்கு எதிராக புகாரளித்தல், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் ஆய்வு செய்தல் மற்றும் நேர்காணலில் சிறந்த நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்களுடன் சிறுவர்களின் பிரச்சனைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாகவும் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும்
பாதுகாக்கும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். மஹ்ருப் , வளவாளர் கலாநிதி எம்.சி.
றஸ்மின், திட்ட உத்தியோகத்தர் ஆர். நதியா, தொடர்பாடல் உதவியாளர் பி.கௌசலியா
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
0 Comments:
Post a Comment