4 May 2024

அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி.

SHARE

அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து கொண்டார். இதன்பொது மேலும் புதுக்குடியிருப்பு விக்னேஸ்வர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக பிரதி நிதிகள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முன்பள்ளி மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, பெற்றோர்களுக்கான விளையாட்டுக்களும், நிழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இதன்போது நிகழ்வுகளில் பங்கேற்ற முன்பள்ளி சிறார்களுக்கும் வெற்றி கிண்ணங்கள், பரிசில்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: