24 Apr 2024

அம்பலத்தடி ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்.

SHARE

அம்பலத்தடி  ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்.

நாகர்கள் வழிபாடு செய்த ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி  ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ இறுதி நாள் தீர்த்த உற்சவம் செவ்வாய்கிழமை(23.04.20240 நடைபெற்றது.

கண்ணகி வரலாற்றில் ஊற்றெடுத்த வந்தாறுமூலை அம்பலத்தடியிலே  நாகர் கால வரலாறு கொண்டு அடியவர்களுக்கு நம்பிக்கையோடு அருள் புரியும் தும்பிக்கையான் ஸ்ரீ நீர் முகப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவ விழா கடடந்த புதன்கிழமை(17) பூசம் நட்சத்திரம் நவமி திதியும் நிறைந்த சித்திரை நான்காம் நாள் வாஸ்து சாந்தி யுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 23.04.2024 செவ்வாய் சித்திராப்பூரணை சித்திரகுப்த விரதம் நிறைந்த நாளில் கிராண்புல் கட்டு சிவகங்கையில் தீர்த்தோற்சவம் இனிதே நடைபெற்றது.

உத்சவ காலத்தில் தினமும் வசந்த மண்டப பூசையும் சுவாமி ஆலய உள்வீதி வெளி வீதி உலா வருதலும் இடம்பெறுற்றன. நான்காம் நாள் கிராமத்தினை சுற்றி ஊர்வலம் வந்து, பின்னர் தீர்த்தோற்சவத்துடன் உத்சவத் திருவிழா நிறைவு பெற்றது.

பூஜைகள் யாவும் உத்சவ கால ஆலய பிரதம குரு விநாயக கிரிஜா பூசணம் சிவ ஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் குருக்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்






SHARE

Author: verified_user

0 Comments: