25 Apr 2024

தமிழ் பொது வேட்பாளரினை நாம் களமிறக்கினால் தமிழ் மகளுக்கு கிடைக்க போவது என்ன – கணேசமூர்த்தி.

SHARE


தமிழ்
பொது வேட்பாளரினை நாம் களமிறக்கினால் தமிழ் மகளுக்கு கிடைக்க போவது என்னகணேசமூர்த்தி.

தமிழ் பொது வேட்பாளரினை நாம் களமிறக்கினால் தமிழ் மகளுக்கு கிடைக்க போவது என்ன? ரனில் விக்கிரமசிங்கதான் அவர் நாட்டில் நிலவிய பொருளாதார பிரச்சனையை தற்போது ஓரளவுக்கு நிவர்த்தி செய்துள்ளார். எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான காணிப் பிரச்சனைகளுக்குரிய நிரந்தர தீர்வு காணப்படும்.

என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை(25.04.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அதற்கு ஆதரவாகத் தான் நாம் மட்டக்களப்பில் மகளிர் மாநாட்டை கடந்தவாரம் நடாத்தியிருந்தோம்.

ஏனைய தமிழ் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளருடன் ஒரு ஒப்பந்தத்தை செய்ய திட்டமிட்டுள்ளனர். எங்களுடைய மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உண்டு வடகிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் நில அபகரிப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மொட்டு கட்சியினருக்கு தெரியும் சஜித் பிரேமதாசாவைக் கொண்டு ஊழல் மிக்க அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்று. இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக டொலர்களைக் கொண்டு வருவதால் தற்போது நாட்டில் ஒரு இஸ்த்திரத்ன்மை நிலவுகின்றது. மக்களினுடைய வாழ்க்கைச் செலவு தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் இலங்கையினுடைய பொருளாதாரம் தற்போது ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருமாதகாலத்திற்குள் மைலத்தமடு மாதவனைப் பிரச்சனைகுத் தீர்வு காண்போம்.   என அவர் இதன்போது தெரிவித்தார்.







 

SHARE

Author: verified_user

0 Comments: