12 Apr 2024

கழை கட்டியுள்ள சித்திரை வியாபாரம்.

SHARE

கழை கட்டியுள்ள சித்திரை வியாபாரம்.

இம்முறை  சித்திரை புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் நகர் பகுதிக்கு வந்து தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  நிலவும் அதிக உஷ்னத்திற்கு மத்தியிலும்  எதிர்வரும் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் வகையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் நகர் பகுதிக்கு வந்து தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

புதிய வருடத்திற்கான  புத்தாடைகளை ஐதீக முறைப்படி  கொள்வனவு செய்வதற்கு சிறந்த நாளாக காணப்படும் வியாழக்கிழமை பல புடவை கடைகளில் வியாழக்கிழமை காலை முதல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுவதை காணக் கூடியதாக உள்ளது.

இதேவேளை தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டக்களப்பு பொதுச்சந்தையிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது

மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக் அமைவாக புத்தாண்டிக்காக நகருக்கு வரும் மக்களின் நலன் கருதி விசேட  பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளததுடன் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன

கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை மக்கள் குடும்பங்களுக்கு தேவையான  புத்தாடைகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இன்று விடுமுறை நாளாக அறிவித்துள்ளதனால் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் மிகவும் உற்சாகமான முறையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

 







SHARE

Author: verified_user

0 Comments: