படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும்; மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இதன்போது 4.00 மணியளவில் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதைத் தொடர்ந்து தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கை இணைய ஊடக அமைப்பின் ஏற்பாட்டானர் பெடிகமகே, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment