கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் சித்திரை குதூகலம்.
நாடு பூராகவும் சமுர்த்தி வங்கிகள் மூலம் சித்திரை புத்தாண்டு விளையாட்டு, நிகழ்வுகள் இடம்பெற்றதை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் விளையாட்டு நிகழ்வு முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுவில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் சி.சுதாகர், கலந்து கொண்டதுடன், மேலும் உதவி பிரதேச செயலாளர் மேனகா புவிக்குமார், ஆலயபிரதமகுரு, சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர், கிராம உத்தியோகத்தர்கள், கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிடுகு பின்னுதல், யானைக்கு கண் வைத்தல், வணிஸ் உண்ணுதல், சமநிலை ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், தலையணை சமர், தேங்காய் துருவுதல், மரதன் ஓட்டம், மாவூதி காசெடுத்தல் மற்றும் நடுவர்களுக்கான சங்கீத கதிரை என இடம்பெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment