4 Mar 2024

ஜனாதிபதி தற்போது முதலில் எந்த தேர்தலை வைப்பது என்று, சிந்தித்து கொண்டு இருக்கிறார் – மு.பா. உ சிறிநேசன்.

SHARE

ஜனாதிபதி தற்போது முதலில் எந்த தேர்தலை வைப்பது என்று, சிந்தித்து கொண்டு இருக்கிறார்மு.பா. உ சிறிநேசன்.

ஜனாதிபதி தற்போது முதலில் எந்த தேர்தலை வைப்பது என்று, சிந்தித்து கொண்டு இருக்கிறார். தற்போது மக்கள் கருத்து கணிப்பில், தற்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு வெல்லக்கூடிய நிலை முற்றாக காணப்படவில்லை. அதே போலவே மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணி இனி வரூகின்ற தேர்தலில் படுதோல்வியடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் மட்.செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை(03.03.2024)  மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போர் அவர் மேலம் கருத்துத் தெரிவிக்கையில்.

அண்மைக்காலமாக இலங்கை இந்தியா மீனவர் பிரச்சினை மேலும் உருவாகியுள்ளது. இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக சகோதர தமிழக மீனவர்கள் எமது இலங்கை நாட்டின் வட எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் மீன் வளங்களை அத்துமீறி எடுத்து செல்வதாக வடபகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கைது செய்யும் நடவடிக்கைகளோடு, நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டாலும் தொடர்ச்சியாக அத்துமீறல்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

இலங்கை அரசும், இந்திய அரசும் நினைத்தால் சுமூகமான ஓர் தீர்வை வழங்க முடியும். இருந்தாலும் தொப்பிள் கொடி உறவுகளுக்குள் மீண்டும் மீண்டும் மோதல்களை உருவாக்க இலங்கை அரசு முனைகிறது. இரு நாட்டு மீனவர்களும்  வாழ்வாதாரத்திற்காகவே மீன்பிடியை மேற்கொள்கின்றனர். எனவே இதனை இரு தரப்பு மீனவர்களும் சிந்தித்து தீர்வுகாண வேண்டும்.

மேலும் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், என இந்திய மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் குறிப்பாக இரு தரப்பு மீனவர்களும் கவனமாக செயற்பட வேண்டும், உணர்வு ரீதியான, உண்மை ரீதியான போராட்டத்தை இலங்கை மற்றும் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் பிரதான பிரச்சினை இந்திய மீனவர்கள் இழுவைமடி வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்களைச் சூறையாடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இருதரப்பு மீனவர்களும், இருதரப்பு அரசுகளும் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை இலகுவாக தீர்க்கவேண்டும்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அது போல் மீனவர்களின் பிரச்சனைகள் வெகுவாக தீர்க்கப்பட வேண்டும். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகவும் சசுலபமாக, இப்பிரச்சினையை தீர்க்க முடியும். அவர் இப்பிரச்சினைகளை நன்கு அறிந்தவர், எனவே இதனை இழுத்தடிப்பு செய்யாமல் இதற்கான பூரணமான தீர்வை அவர் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இருதரப்பு மீனவர்களும் தத்தமது எல்லைக்குள் சட்டரீதியான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை சிறப்பித்து வாழ்வதற்கு அரசுகள் உதவ வேண்டும்.

அண்மையில் இந்திய மீனவ சங்க தலைவர் ஒருவர் கருத்துதெரிவிக்கையில் அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு எமது வரிப்பணம் மூலம் நாம் உணவளிக்கிறோம். எனவே நாம் தொப்பிள் கொடி உறவுகளாக பின்னிப்பிணைத்து இருக்கும் போது நமக்குள் பிரச்சினைகளை வளர்க்காமல் இதற்குரிய தீர்வை பெற வேண்டும்.

மாகாண சபை கலைக்கப்பட்டு  06 ஆண்டுகளாகியும் இன்னும் தேர்தல் இடம்பெறவில்லை. அதுபோல்தான் உள்ளுராட்சி மன்ற தேர்தல், அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சாரம் இடம்பெற்று கொண்டு இருக்கும் போது பணமில்லை எனக்கூறி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜனநாயகத்திற்கு விழுந்த மரண அடி என்றே கூற வேண்டும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக, ஜனநாயகத்தை எதிர்த்து எந்த அரசியலும் ஒரு போதும் செய்ய முடியாது. அரசியல் சுயலாபத்திற்காக  தேர்தலை நடத்துவது என்பது கவலையளிக்கும் விடயமே, தற்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், தமது ஆளும் கட்சிகள் வெல்ல முடியாது என்பதற்காக அரசியல் சுயலாபத்திற்காக இவ்வாறான கீழ்த்தரமான வேலை செய்வது கவலையளிக்கின்றது.

ஜனாதிபதி தற்போது முதலில் எந்த தேர்தலை வைப்பது என்று, சிந்தித்து கொண்டு இருக்கிறார். தற்போது மக்கள் கருத்து கணிப்பில், தற்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு வெல்லக்கூடிய நிலை முற்றாக காணப்படவில்லை. அதே போலவே மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணி இனி வரூகின்ற தேர்தலில் படுதோல்வியடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அரகலய போராட்டம் மூலம் 69இலட்சம் வாக்களித்த, பெரும்பான்மை சிங்கள இனத்தவர்கள் மூலமே கடந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பிய நிலையும் காணப்படுகிறது. இவ்வாறான போராட்டங்கள் மூலம் மக்களை அடக்குவது தொடர்பான விடயங்களையும் அந்த அரசு மேற்கொண்டும் பயணளிக்கவில்லை.

தற்போதைய ஜனாதிபதி தான் அதிக திறமை உள்ள, மூத்த அரசியல்வாதி எனவே ஜனநாயகத்திற்கு மதிப்பு அளித்த காலச்சூழலுக்கு ஏற்ற தேர்தலை நடாத்துவதற்குரிய திட்டங்களை முன்னெடுத்து  செயற்பாடுமாறு கேட்டுக்கொள்வதோடு, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய அரசாங்கத்தை அமைப்பதே சிறந்தது.

குறிப்பாக மாகாண சபை என்பது இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்காக உருவாக்கப்பட்டது. எனவே மாகாண சபை தேர்தல் உடனடியாக நடாத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், ஊழல் இலஞ்சம் அற்ற தேர்தல் மற்றும் அரசு மலர வேண்டும்.

அண்மையில் சுகாதார அமைச்சராக இருந்த ஹெகலிய ரம்புக்வெல்ல  பாதுகாப்பதற்காக அரசு தமது கைகளை உயர்த்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை காட்டினாலும், நீதிமன்றம் அவரது மருந்து  மோசடி தொடர்பான விடயங்களில் உண்மைத்தன்மை இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

மக்களின் உயிர்களை பாதுகாக்காத அரசு, சுயலாபமடைவதாகவும், இலஞ்சம் ஊழலற்ற, மற்றும் புதிய அரசு உருவாக வேண்டும் எனவும், தற்போதைய அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.





 

SHARE

Author: verified_user

0 Comments: