மட்டக்களப்பில் பாரிய விபத்து வயோதிபர் ஒருவர் பலத்த காயம்.
மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற சிறிய ரக லொரி வாகனமே இவ்விபத்து சம்பவத்திற்க்கு காரணம் என மட்டக்களப்பு தலைமையக போலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவரே விபத்துக்கள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகம் காரணமாக இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த. மோட்டார் வண்டிகள் பாரிய சேதம் அடைந்துள்ளதுடன், முன்னால் தரித்து நின்று கொண்டிருந்த எரிவாயு சிலிண்டர் வாகனமும் இவ்விபத்தில் சேதமடைந்துள்ளதாக பெலிசார் தெரிவித்தனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment