31 Mar 2024

கிழக்கு மாகாணத்தில் பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுப்பு.

SHARE

கிழக்கு மாகாணத்தில்  பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் உயிர்த்த  ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுப்பு

பாதுகாப்பு அமைச்சினால் நாடெங்கிலும் உள்ள 1873  கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு   பலத்த பாதுகாப்பு  நான்கு வருடங்களின் பின் வெளிநாட்டவர்களும் உயிர்த்த  ஞாயிறு வழிபாடுகள் பங்கேற்பு உயிரிழந்த உறவுகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி தேவாலயங்களில் வழிபாடுகள் முன்னெக்கப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாணத்தில்  பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் உயிர்த்த  ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுப்பு  நான்கு வருடங்களின் பின் வெளிநாட்டவர்களும் இதில் பங்கேற்பு உயிரிழந்த உறவுகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி தேவாலயங்களில் வழிபாடுகள் முன்னெடுப்பட்டன.

கிறிஸ்தவ மக்களின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்றான உயிர்த்த ஞாயிறு வழிபாட்டை முன்னிட்டு  நாடெங்கிலும் உள்ள 1873  கிறிஸ்தவ தேவாலய ங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் கடந்த மூன்று தினங்களாக விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததை அடுத்து மட்டக்களப்பு தாண்டவன்வெழி புனித காணிக்கை மாதா தேவாலயத்திலும் ஆலய பங்கு தந்தை அவர்களால் உயிர் நீத்த உறவுகளுக்காக மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு அவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. நான்கு வருடங்களின் பின் வெளிநாட்டவர்களும் இதில் பங்கேற்றிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.























 

SHARE

Author: verified_user

0 Comments: