31 Mar 2024

நாம் கேட்கும் அரசியல்" அமைப்பின் அங்குரார்ப்பணம்.

SHARE

நாம் கேட்கும் அரசியல்" அமைப்பின் அங்குரார்ப்பணம்.

"நாம் கேட்கும் அரசியல்" என்ற அமைப்பின் அங்குரார்ப்பணம் சனிக்கிழமை(30.03.2024)  மட்டக்களப்பு கல்லடியிலுள்ள டிரீம்ஸ்பேஸ் நிறுவகத்தில் இடம்பெற்றது. நாம் கேட்கும் அரசியல் அமைப்பானது இளைஞர்கள், யுவதிகள் அரசியல் மற்றும் நல்லாட்சியில் பங்குபற்றுதலினை ஊக்குவிக்கவும் தூய அரசியலினை மக்கள் தெரிவு செய்வதற்கான செயற்றிட்டங்களினை முன்னெடுக்க IRI அமெரிக்க நிறுவனத்தினால் நடாத்தப்படும் எமெர்ஜிங் லீடர்ஸ் அகாடமி (ELA) யின் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்ப்பாடாகும்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் எமெர்ஜிங் லீடர்ஸ் அகாடமி (ELA) யின் உறுப்பினர்கள் பங்குபற்றுதலுடன் செயற்றிட்டத்தின் பிரதானி கிஷோத் நவரெட்ணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இச்செயற்திட்டமானது இளைஞர்கள், யுவதிகள் அரசியல் மற்றும் நல்லாட்சியில் பங்குபற்றுதலில் உள்ள தடைகள் மற்றும் பிரச்சினைகளின் ஆய்வின் முடிவுகளினையும் காட்சிப்படுத்தி அதில் ஊடகத்தின் வகிபங்கு எவ்வாறு காணப்படுகின்றது மற்றும் ஏதிர்காலத்தில் எவ்வாறு ஊடகம் தங்களது ஒத்துழைப்பினை தூய அரசியல் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் பங்குபற்றுதலினை ஊக்குவிக்க செயற்படலாம் என்று விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் இளையோர் அமைப்புக்கள் இணைந்து விவேகம் மற்றும் வேகத்துடன் செயற்ப்படும் போது சிறந்த அரசியல் தலைமைத்துவங்களினையும், அவர்களினை தேர்வு செய்வதற்கான மக்களுக்கான தெளிவூட்டல்களினையும் சிறந்த முறையில் வழங்கமுடியும் என மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் நாம் கேட்கும் அரசியல் அரசியல் என தெரிவித்ததோடு, இந்நிகழ்வு ஒரு சிறந்த ஆரம்பத்திற்காக இனிதே நிறைவு பெற்றது.

 












SHARE

Author: verified_user

0 Comments: