சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை(16.02.2024) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கலாரஞ்சனி தலைமையில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இதில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன் மற்றும் ச.வியாளேந்திரன், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதாரதுறை அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வைத்தியசாலையின் குறைபாடுகள், மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் குழாம் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment