26 Dec 2025

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவு அஞ்சலி.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவு  அஞ்சலி.

தேசிய பாதுகாப்ப தினமம், சுனாமி ஆழிப் பேரலையின்21 வது அண்டு நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில்  நடைபெற்றது. 

இதன்போது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கடற்கரை அண்மித்த கரையோரப் பிரதேசத்தில் ஒரு லெட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: