17 Feb 2024

குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் சஞ்சரிக்கும் வெளிநாட்டு பறவைகள்.

SHARE

குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் சஞ்சரிக்கும் வெளிநாட்டு பறவைகள்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம்  ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்து பறவைகள் சணாலயத்தில் பல இலட்சக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகளை சஞ்சரிப்பதை அவதானிக்க முடிகிறது.

அதில்  Australian White Ibis என்ற  இன வலசை வரும் அதிகளவு பறவைகளை அங்கு காணமுடிகின்றது.

இப்பறவை இனம் வருடத்தில் மார்களி, தை, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு  இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் சித்திரை, வைகாசி, மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் சூழலியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க இந்த ஏத்தாலைக் குளத்தில் சிலர் இரவு வேளைகளில் கழிவுகளைக் கொட்டுவதனால் அக்குளம் மாசடைந்து வருவதாகவும், இதனால் அக்களத்தில் வாழும் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. அதுபோல் இன்னும் சிலர் பறவைகளை இரவு வேளைகளில் வேட்டையாடி வருவதாகவும், அக்குளத்தை அண்டியுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

எனவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள்மடம் ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: