16 Feb 2024

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுடன் விசேட கலந்துரையாடல்.

SHARE

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுடன் விசேட கலந்துரையாடல்.

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை  (16.02.2024)   இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன் கலந்து கொண்டார்.

மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான  
 செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா வீடுதிகள், உணவகங்கள் போன்றவற்றை அமைதல் மற்றும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்ச கோபுரத்தை புனரமைப்பு செய்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்கே, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார் மற்றும் துறைசார் நிபுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






 

SHARE

Author: verified_user

0 Comments: