22 Feb 2024

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு.

SHARE

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம் வித்தியாலய அதிபர் எஸ்.சிறிதரன் தலைமையில் வியாழக்கிழமை  (22.02.2024)  இடம்பெற்றது.

இதன்போது அதிபர், ஆசிரியர்களையும்இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களால் புதிதாக முதலாம் தரத்திற்கு இணையும் மாணவர்களுக்கும் மலர்மாலை அணிவித்து பாடசாலை வழாகத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று, முதலாம் தரத்திற்கு வருகைதந்த மாணர்வகளை வரவேற்று அதிபர், ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றன.

இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் திருமதி .தனசேகரன், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.செல்வராசா  மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள்  என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: