23 Feb 2024

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு.

SHARE

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி வலயத்துக்குட்பட்ட போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்தில் உள்ள 33 பாடசாலைகளில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சுமார்  677 மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் களுதாவளையிலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் சமூக பொருளாதார கல்வி அபிவித்திச்சங்கத்தினால் வியாழக்கிழமை(22.02.2024) வழங்கி வைக்கப்பட்டன.

களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவித்திச்சங்கம் கட்டாரில் தொழில் புரியும் உறவுகளின் பிரதான அனுசரணையில் வருடா வருடம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களை, அந்நிலையிலிருந்து மீட்டு பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்து தொடர்கல்வியை பெறுவதற்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்து.

இதன் ஐந்தாம் கட்டமானது மட்.வெல்லாவெளி கலைமகள் .வி பாடசாலையின் கேட்போர் கூட்டத்தில் வைத்து இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறீதரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் .அருள்ராஜா, சீடா அமைப்பின் தலைவர் கனேசன் கிசோபன், சீடா அமைப்பின் உறுப்பினர்கள்கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்தில் இதுவரையில் 80 பாடசாலைகளில் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எமது களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவித்திச் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் .கிசோபன் இதன்போது தெரிவித்தார்.

 












SHARE

Author: verified_user

0 Comments: