22 Feb 2024

இணையவழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

SHARE

இணையவழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்  தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு  என்பன இணைந்து நடாத்திய இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டற் செயலமர்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை  (22.02.2024) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனனினால் இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக  ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 













SHARE

Author: verified_user

0 Comments: