23 Feb 2024

நெருப்பாற்றில் நீந்துவோம் எனும் தலைப்பில் விடாமுயற்சிக்கான ஊக்கமளிக்கும் கருத்தரங்கு.

SHARE

நெருப்பாற்றில் நீந்துவோம் எனும் தலைப்பில் விடாமுயற்சிக்கான ஊக்கமளிக்கும் கருத்தரங்கு.

மட்டக்களப்பு மாவட்டம்  பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்குநெருப்பாற்றில் நீந்துவோம்எனும் தலைப்பில் விடாமுயற்சிக்கான ஊக்கமளிக்கும் கருத்தரங்கொன்று வியாழக்கிழமை(22.02.2024) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விடாமுயற்சிக்கான ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளை பல இடங்களுக்கும் நேரில் சென்று மேற்கொண்டுவரும் ஜாம்பவனாகவும், சமூக ஊடக ஆர்வலரும், தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் ; Motivational Speaker ருமான ஜூட் அஜித் அன்டனி (Jude Ajith Antony) அவர்கள் இதன்போது கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் செலூக்கக் கருத்துக்களை வழங்கினார்.

பாடசாலை அதிபர் .சத்தியமோகன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப்பரும் கலந்து கொண்டிருந்தனர்.

தாமாக முன்வந்து மாணவர்கள் மத்தியில் விடாமுயற்சிக்கான ஊக்கமளிக்கும் கருத்துக்களை வழங்கிய ஜூட் அஜித் அன்டனி அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தினரால், பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னமும் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.











 


SHARE

Author: verified_user

0 Comments: