23 Feb 2024

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாதும்மானவள் செயலுக்க உரை.

SHARE

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாதும்மானவள் செயலுக்க உரை.

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனம் இணைந்து நடாத்திய யாதும் ஆனவள் செயலுக்க உரை நிகழ்வு வெள்ளிக்கிழமை(23.02.2024) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கை நிறுவன இராசதுரை அரங்கில் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி தலைமையில் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், மத தலைவர்கள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இந்தியாவின் தலைசிறந்த செயலுக்க விரிவுரையாளர்களில் ஒருவரான திருமதி ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலுக்க உரையினை நிகழ்த்தினார. இதன்போது பத்து மாணவர்களுக்கு கற்றலுக்குரிய சந்தேக வினாக்கள் கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. இதன்போது கற்றலுக்குரிய உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறப்பு உரையாற்றிய ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையில் உள்ள மாணவர்கள் நெருப்பில் பூத்த மலர்கள், இவர்கள் அவ்வாறான சூழ்நிலையிலும் அதிலிருந்து வெளிவந்து வெற்றியடைவார்கள் என இதன்போது ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


























 

SHARE

Author: verified_user

0 Comments: