25 Feb 2024

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகப் புனரமைப்பு பொதுக் கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் .சபியதாஸின் ஒழுங்கமைப்பில் சம்மேளன தலைவர் தி.ஜெகநாதனின் தலைமையில் வெள்ளிக்கிழமை (23.02.2024) இடம்பெற்றது.

இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் யுவப்பிரகாஷ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கு.துஷாந்தன் மற்றும் பிரதேச இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிய நிருவாகத்தில் தலைவராக ஞா.சஞ்ஜீவன், செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தரும், பொருளாளராக கு.சுவர்ணியா, அமைப்பாளராக கு.இன்பலோஜன், உப தலைவராக தி.ஜெகநாதன், உப செயலாளராக செல்வி..பவித்திரா, உப அமைப்பாளராக சி.ஹம்சேஸ்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுமன், செயற்பாட்டு குழுக்களுக்குரிய செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு - கேகாலை இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: