மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரதிசத்தி பெற்ற குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் சனிக்கிழமை(24.02.2024) மாலை இடம்பெற்றது.
முதலில் மூல மூர்த்தியாகிய அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகருக்கு பூஜைகள் இடம்பெற்று, பின்னர் சித்திரத் தேருக்குரிய கலசத்திற்கு அபிஷேகம் இடம்பெற்றது.
தேருக்குரிய கிரியைகள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வடம் பூட்டப்பட்டு சித்திரத் தேரின் வெள்ளோட்டம் இடம்பெற்றது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் செல்வ ரவீந்திரன் தலைமையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வே.குகேந்திரக் குருக்கள் தலைமையிலான குழுவினர் கிரியைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு சித்திரத் தேரின் வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)
0 Comments:
Post a Comment