18 Dec 2023

நாவிதன்வெளி தாய் சேய் சிகிச்சை நிலையம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

SHARE

நாவிதன்வெளி தாய் சேய் சிகிச்சை நிலையம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் நாவிதன்வெளி தாய் சேய் சிகிச்சை நிலையம் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை நிர்வாகத்திற்குட்பட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனையின் கீழ் இயங்கி வரும் நாவிதன்வெளி சிகிச்சை நிலையம் மிக நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வந்தது.  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வன்னி ஹோப் நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த சிகிச்சை நிலையம் அவுஸ்திரேலியாவில் உள்ள விந்திரன் வெங்கடாச்சலம் குடும்பத்தாரின் நிதியுதவியின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தினால் மலசல கூடம், குடிநீர் விநியோகம், கட்டிடத்தின் உட் கூரை, சிறுவர் பூங்கா, ஓய்வு அறை, சுற்றுமதில் போன்றவைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையத்தில் சேவையை நாடி வருகின்ற கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் இலகுவானதும், மகிழ்ச்சிகரமானதுமான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உகந்த வகையில் இந்த தாய் சேய் சிகிச்சை நிலையம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையிட்டு சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள் சமூக நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சில்மிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் விசேட அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரமேஷ்  வன்னிஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர்களான பாஸ்கரன், றேகா வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊடக இணைப்பாளர் வசீம் நாவிதன்வெளி பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள்  தாதி உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. 













SHARE

Author: verified_user

0 Comments: