18 Dec 2023

பக்கச் சார்பின்றி அபிவிருத்திகளை எனது காலப்பகுதியில் முன்னெடுப்பதே எனது நோக்கம் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்.

SHARE

பக்கச் சார்பின்றி அபிவிருத்திகளை எனது காலப்பகுதியில் முன்னெடுப்பதே எனது நோக்கம் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் திங்கட்கிழமை(18.12.2023) காலை 8.20 மணிக்கு மாவட்ட செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றார்.

அனைத்து மக்களுக்கும் பக்கச் சார்பின்றி அபிவிருத்திகளை எனது காலப்பகுதியில் முன்னெடுப்பதே எனது நோக்கம் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமனம் பெற்ற திருமதி முரளிதரனை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றது. புதிய அரசாங்க அதிபரை மேலதிக அரசாங்க அதிபர் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர் அதன்பின் சுப நேரத்தில் புதிய அரசாங்க அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள்  உதவி மாவட்ட செயலாளர்  சகல பிரதேச செயலாளர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் புதிய அரசாங்க அதிபருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இதன்போது தெரிவித்தார்.

புதிய அரச அதிபராகப் பொறுப்பேற்றுவுள்ள திருமதி ஜே.ஜே முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பதுடன் கிழக்கு மாகாண சபையின் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் மிகச்சிறப்பாகக்  கடமையாற்றியவர். முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய  அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசு இவரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: