மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரத்தான நிகழ்வு பிரதேச செலயக கேட்போர்கூட்டத்தில் இன்று புதன்கிழமை(08.11.2023) நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் பிரதேசசெயலக உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், என பலரும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டு சுமார் 200 இற்கு மேற்பட்டோர் இரனத்ததானம் வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு இதன்போது கலந்து கொண்டு இரத்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் 6 தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்ற இரத்ததான் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment