கிழக்கு மாகாணத்தில் மணல் வீதியற்ற மாகாணமாக மாற்றுவதற்குரி வேலைத்திட்டங்கள் முன்நெடுப்பு – பிரசாந்தன்.
கிழக்கு மாகாணத்தில் மணல் வீதியற்ற மாகாணமாக மாற்றுவதற்குரி வேலைத்திட்டங்கள் முன்நெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய ஆரம்ப பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 70 வருகாலடாக அரசியல் பேசிய சமூகம் பயணிப்பதற்கு பாதைகள் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
என கிழக்கு மகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் பொதுச் செயலாளருமான பூபாலபிள்யை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள 450 மீற்றர் நீளம் கொண்ட காளியோயில் வீதி ங்றீட் வீதியாக புனரமைப்பு வேலைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் உத்தியோக பூர்வமாக செவ்வாய்கிழமை(07.11.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது கலந்து கொண்டு வீதியின் அபிவிருத்தி வேலைகளை துவக்கிவைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர மேலும் தெரிவிக்கையில்…
போக்குவரத்தினை இலகுபடுத்துகின்ற போதுதான் உள்நாட்டு உற்பத்திகளையும், கல்வியையும் மேம்படுத்த முடியும் எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த வேண்டும் என்பதற்காக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சாந்திரகாந்தன் அவர்கள் விவசாய, மீன்பிடி, உள்ளிட்ட பல வாழ்வாதார வீதிகளையும் செயப்பனிடுவதற்கு முன்னுரிமை வழங்கி வருகின்றார்.
கிழக்கு மாகாணத்தில் மணல் வீதியற்ற மாகாணமாக மாற்றுவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்நெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய ஆரம்ப பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 70 வருகாலடாக அரசியல் பேசிய சமூகம் பயணிப்பதற்கு பாதைககள் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எல்லா விடையங்களுக்கும் மாற்று அரசியலிடம் கையேந்த வேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது. ஆனால் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பெறுப்பேற்ற பின்னர் அனேகமான வீதிகள் செப்பனிடப்பட்: வரப்படுகின்றன.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் லிங்கேஸ்வரன், மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment