11 Oct 2023

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்தாதனம் முகாம்.

SHARE

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்தாதனம் முகாம்.

கம்பகஹா மாவட்டம் லியனகேமுல்ல, சீதுவை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் சமூகப் பணி இளங்கலைமானி கற்கை நெறியினை கற்கும் இரண்டாம் தர மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்தாதனம் வழங்கும் நிகழ்வு நேற்று நிறுவன வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நிறுவன உத்தியோகத்தர்கள் என 70ற்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கி இருந்தனர்.

இவ் நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர்  சாமினி  அத்தநாயக்க, சமூகப் பணி பாடசாலையின் பணிப்பாளர்  ஜெயரூபன் ,நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையின் வைத்தியர் திருமதி  சமந்தி பெரேரா  வைத்திய சாலையின் தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: