நந்தவனம் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற “ஆரோக்கியமிகு அகவையினை நோக்கிய” நிகழ்வு.
களுவாஞ்சிகுடி நந்தவனம் சமூக நலன்புரி அமைப்புடன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர், முதியோர் தின விழா செவ்வாய்கிழமை(2023.10.10) நந்தவனம் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் சா.கருணாகரன்பிள்ளை; தலைமையில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.
“ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்" எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது முதியோர் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள், கௌரவிப்பு நிகழ்வுகள், என்பன இடம்பெற்றதுடன் கலந்துகொண்ட அதிதிகளால் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு முதியோர்களுக்கான அத்தியாவசிய உடைகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணபின்ளை, மண்முனை தென் எருவில் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment