14 Oct 2023

களுவாஞ்சிகுடியில் முன்னெடுக்கப்படும் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள்.

SHARE

களுவாஞ்சிகுடியில் முன்னெடுக்கப்படும் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள சிறிய குளங்கள், நீர் நிலைகள், தோட்டங்களிலுள்ள நீர் நிலைகள், பாடசாலைகள், வீடுகள், வர்த்தக நிலைகங்கள் என பல இடங்களிலும் இவ்விடேச டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாககவும், இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு டெங்கு நுளம்புகள் பெருக்கும் சூழலை வைத்திருப்போர்க்கு விழிப்புணர்வு, ஆலோசனைகளும் வழங்கப்படுவதுடன், மேலும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டெங்கு குடம்பிகள், காணப்படும் நீர் தொட்டிகள், சிறிய குளங்களுக்கு தற்காலிக நடவடிக்கையான பொதுச் சுகாதார ஒயில் ஊற்றி குடம்பிகளை அழிக்கும் செயற்பாடுகளும் முன்நெடுக்கப்பட்டு வருகின்றன.










SHARE

Author: verified_user

0 Comments: