15 Oct 2023

பட்டிருப்பு பாலத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த உயர்மட்ட குழு.

SHARE

பட்டிருப்பு பாலத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த உயர்மட்ட குழு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு பாலத்தின் புனரமைப்பு மற்றும் பட்டிருப்பு வீதியை அகலப்படுத்துவது தொடர்பில் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அலோசனைக்கு அமைய வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர்மட்ட  அதிகாரிகள் அடங்கிள குழுவொன்று சனிக்கிழமை மாலை (14.10.2023) விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்கும், எழுவாங்கரைப் பகுதிக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக விளங்குவது பட்டிருப்பு பாலமாகும். இப்பாலத்தின் ஒரு பகுதி பழுதடைந்த நிலையில் அப்பகுதியூடாக பயணம் செய்ய முடியாத அளவிற்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி இராஜாங்கக அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய பட்டிருப்பு வீதியை அகலப்படுத்துவது தொடர்பிலும், பட்டிருப்பு பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வீதி அபிவிருத்தி இராஜாங்கக அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர் நாயகம், திட்டமிடல் பிரிவு, மாகாணப் பணிப்பாளர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபைச் செயலாளர் உள்ளிட்ட அடங்கிய குழுவென்று நேரில் விஜயம் செய்துள்ளர்.

இக்குழு உரிய வீதியின் நிலமை தொடர்பிலும், பட்டிருப்பு பாலத்தின் தற்போதைய நிலமை தொடர்பிலும் ஆராய்ந்து அவதானித்துச் சென்றுள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: