6 Sept 2023

மிகப் பெரிய உண்மையை மறைக்க முற்படும் வேடிக்கை கிழக்குத் தலைமையை இல்லாதொழிக்கும் சதிவலையின் ஓர் அங்கம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

SHARE

மிகப் பெரிய உண்மையை மறைக்க முற்படும் வேடிக்கை  கிழக்குத் தலைமையை இல்லாதொழிக்கும் சதிவலையின் ஓர் அங்கம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

உயிர்த்த ஞாயிறு மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலை தடம் மாற்றி முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முற்படும் உண்மைக்கு புறம்பான செய்தியினை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(06.09.2023) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இஸ்லாமிய வகாப்பிச வாத கொள்கையின் பால் இஸ்லாமிய ராஜ்ஜீயத்தினை உருவாக்குவதற்கான புனிதப் போர் என ஐளுஐளு அமைப்பானது இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு உரிமை கோரிய போதிலும் இவ் மிகப் பெரிய உண்மையினை திசைமாற்றி உண்மையான குற்றவாளிகளையும் அடிப்படை வகாப்பிச வாதிகளையும் பாதுகாப்பதற்கான சதிவலை அரசியல் புகலிடம் கோரிய ஆஷாத் மௌலானா ஊடாக பின்னப்படுவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் இடம் பெறுகின்றபோது இவ்வாறு இலங்கையின் பக்கம் சர்வதேசத்தின் பார்வையினை திருப்புவதற்காக ஏதோ ஒரு நாடகம் அரங்கேறுவது வழக்கம்.

அந்தவகையிலேயே உண்மைக்கு புறம்பாக முற்றிலும் சோடிக்கப்பட்ட கட்டுக்கதையினை அரங்கேறறியிருப்பதானது வேதனையளிக்கின்றது.

ஊடகங்கள் ஊடாக தர்மத்தினை கடைப்பிடித்து நடுநிலையான உண்மைக் கருத்துக்களை வெளிக்கொண்டுவர வேண்டும் .

மாறாக களத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தினை திரிவுபடுத்தி திசைமாற்றி குறித்த நல்லாட்சி காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கிழக்குத் தலைவர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்புபடுத்தி சித்தரிக்க முற்பட்டிருந்தது வேடிக்கைக்குரியது.

வெளிநாடுகளின் புகலிடம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு நாட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமக்கு உயிராபத்து உள்ளது போன்று பல்வேறு உண்மைக்கு புறம்பான குற்றச் சாட்டுகளை முன்வைத்தே புகலிடம் கோருவார்கள் அந்த வகையில் ஆஷாத் மௌலானவும் திட்டமிட்ட போலி நாடகம் ஒன்றினை அரங்கேற்றியுள்ளார். இவரின் புகலிடம் கோரிக்கையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திய முகவர்களும் வகாப்பிச கொள்கையினை அரங்கேற்றத் துடிக்கும் செல்வந்தர்களும் மக்களைக் குழப்பி தமது எண்ணக்கருவினை நிறைவேற்றிக் கொள்வதற்கான மார்க்கமாக இதனை சாதகமாக பயன்படுத்தி முனைவது உள்ளங்கை நெல்லிக் கனியாக புலப்படுகின்றது.

அதே வேளை எரிகின்ற நெருப்பில் புடுங்கிய இலாபம் எனும் கொள்கையுடன் பயணிக்கும் அரசியல் வியாபாரிகளும் 70 வருடங்களுக்கு மேலாக மக்களை ஏமாற்றி அரசியல்; அறிக்கை வீரர்களும் இஸ்லாமியவகாப்பிச வாதகடும் போக்கு வாதிகளை பாதுகாத்துக் கொண்டு கிழக்கில் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை பழிவாங்குவதற்கான யுத்தியாக இதனை பயன்படுத்த விளைவதுகோமாளித்தனமாக உள்ளது.

கிழக்கில் தமிழர்களின் நிலையறியாது நாட்டின் எதிர்கால போக்கு உணராது சர்வதேசத்தினர். வகிபாகம் புரியாது தமது அரசியல் கதிரை மாத்திரம் பறிபோகக் கூடாது என்பதை மாத்திரம் கருத்திற்கொண்டு தமிழர்கள் எப்படி

போனாலும் பரவாயில்லை என்ற அடிமுட்டாள் தனமான சிந்தனையுடைய தேசியம் பேசும் அரசியல் தலைமைகள் மொட்டைத் தலைக்கும் முளங்கலுக்கு முடிச்சு போடுவதை மக்கள் உணராமலில்லை என்பதனை விளங்கிக்கொள்ள வேண்டும். என அதில் குறிப்பிட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: