6 Sept 2023

அழுகிய மீங்களும், புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டன.

SHARE

அழுகிய மீங்களும், புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அழுகிய மீன்கள் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரால் புதன்கிழமை(06.09.2023) பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதிக்கு தமது கடமையின் நிமிர்த்தம் அங்கு திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த குறித்த பொதுச் சுதாதார பரிசோதகர் குறித்த மீன்களைக் கைப்பற்றி அவற்றை வியாபாரிகள் மேலும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல் பறிமுதல் செய்து எரியூட்டி அழித்துள்ளார்.

இதன்போது 76 கிலோ கிராம் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 2 வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ளதாகவும், மேலும் 6 வியாபாரிளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்தார்.

இந்நிலையில் புகையிலை மற்றும் மதுசார விற்பசைன் சட்டத்திற்கு முரணான வகையில், வெளிக்காட்டி விற்பனை செய்த 11 கிலோ கிராம் புகையிலையையும் இதன்போது களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் மேலும் தெரிவித்தார்.














 

SHARE

Author: verified_user

0 Comments: