யானையின் தாக்கதில் இருந்து உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கவும் - மக்கள் அரசிடம் வேண்டுகோள்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உன்னிச்சை கிராமத்தில் புதன்கிழமை இரவு புகுந்த யானைகள் விவசாயி ஒருவனின் தென்னந்தோப்பினை அழித்து துவசம் செய்துள்ளது.
இதில் ஐந்து வருடங்களாக பராமரித்து வந்த சுமார் 25 தென்னைமரங்களை அழித்துள்ளதாக அக்குறித்த இவ்விவசாயி தெரிவித்துள்ளார்.
அப்பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலி இருந்தும் காட்டுயானைகள் அதனையும் கடந்து கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதுடன் வீடுகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருசில குடும்பங்கள் இணைந்து யானையின் தாக்கததில் இருந்து தமது உயிரையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கு உதவுமாறு இம்மக்கள் அரசாங்கததிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
0 Comments:
Post a Comment