இருட்டுச்சோலைமடுவில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார், சிவமுத்து மாரியம்மன் அம்மன் புகழ்பாடும் இறுவெட்டு வெளியீடு.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருட்டுச்சோலைமடுவில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார், சிவமுத்து மாரியம்மன் ஆலத்தில் அம்மன் புகழ்பாடும் இறுவெட்டு வெளியீடு நிகழ்வு திங்கட்கிழமை (31.07.2023) மிக சிறப்பாக இடம்பெற்றது.
யூட் நிரோசனின் இசையில் இப்பக்தி காவியங்கள் இடம் அமையப் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மந்திர சக்கரவத்தி சிவஸ்ரீ கு.தேவராசா குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பல்கலைக் கழக விரிவுரையாளர்களான மேகராசா, மற்றும் மோகனதாஸ், ஆலய நிருவாகத்தினர், பொதுமக்கள் என இதன்போது பலர் கலந்து கொண்டு இறுவெட்டினை வெளியிட்டு வைத்தனர்.
0 Comments:
Post a Comment