31 Jul 2023

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாரிய இரு வெவ்வேறு விபத்துக்கள் ஆறுபோர் படுகாயம் வாகனங்களுக்கும் பாரிய சேதம்.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாரிய இரு வெவ்வேறு விபத்துக்கள் ஆறுபோர் படுகாயம் வாகனங்களுக்கும் பாரிய சேதம்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் ஞாயிற்றுக்கிழமை(03.07.2023) மாலை இடம் பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

கல்முனையிலிருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு மினுவான்கொடை  நோக்கிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் அதிக தூக்கம் காரணமாக மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் அமைதுள்ள மின்கம்பம் ஒன்றில் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக லொறி பாரிய சேதமடைந்துள்ளதுடன் பயணித்த லொறியின் நடத்துனருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் அதில் இருவர் உட்பட்ட இவ்விபத்தில் மூவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க ஞாயிற்றுக்கிழமை மாலை அதே மட்டக்களப்ணப கல்முறை பிரதான வீதியில் நாவற்குடாவில் இடம்பெற்ற மற்றுமாரு விபத்தில் 3 படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகசும் பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி இஸ்கூட்டர் ரக மோட்டார் வண்டியில் தாயும் மகனும் பயணித்துள்ளனர். இந்நிலையில் ஊர் பக்கமிருந்து இரும்பு, தகரம், உள்ளிட்ட, பொருட்களை வாங்கி வரும் நபர் ஒருவர் தீடீரென துவிச்சக்கர வண்டியில் குறுக்கீடு செய்தமையால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் மோட்டார் வண்ணி பலத்த சேதமடைந்துள்ளதுடன், இவ்விபத்திலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்குறித்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: