மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நடத்திய பூப்பந்தாட்டம்.
மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் பாடசாலை சிறுவர்களுக்காக ஒவ்வொரு போயா தினத்திலும் நடாத்தும் பூப்பந்தாட்ட அறிமுக பயிற்சியின் இரண்டாவது கட்டம் செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் முன்னிலையில் பிரதம பயிற்றுவிப்பாளர் கமலன் தலைமையில் இடம்பெற்றது.
110 சிறுவர்களின்
பங்களிப்புடன் காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்ற இப்பூப்பந்தாட்ட பயிற்சி நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி எஸ்.
ரஜீவன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கு விளையாட்டின் தேவைபற்றி சிறப்பான விளக்கம் கொடுத்தது
நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இப்பயிற்சிக்கு வலயக்கல்வி
அலுவலக உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ். ரவீந்திரன் பங்கேற்று, முழு பங்களிப்பையும் வழங்கினார்.
0 Comments:
Post a Comment