3 Jul 2023

பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் பெண்கள் உதைப் பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பில் நடைபெறவுள்ள முதலாவது உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி.

SHARE

பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் பெண்கள்  உதைப் பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பில் நடைபெறவுள்ள முதலாவது உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான உதை பந்தாட்டத்தை ஊக்குவிப்போம் எனும் செயல் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகள் கலந்து கொள்ளும் பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்று போட்டி சம்பந்தமான ஊடக சந்திப்பும் கழகங்களுக்கான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வும் வியாழக்கிழமை(29.06.2023) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பெண்கள் உதைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் தற்போது மாகாண மட்டத்தில் சாதனை புரிந்து, தேசிய மட்டத்தில் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தி வருவதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனையின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த விசேட பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்று போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பின்தங்கிய பிரதேச பாடசாலையான வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு பெண்கள் பாடசாலையின் உதைப்பந்தாட்ட  அணி மாகாண மட்டத்தில் சாதனை புரிந்து தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, ஏனைய பாடசாலைகளிலும் பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வவுனத்தீவு வெல்லாவெளி, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து பெண்கள், இந்த சுற்று போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தச் சுற்றுப் போட்டியானது அடுத்த மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் மட்டக்களப்பு விபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போதைக்கு அனுசரணையாளர்களாக வேல்முருகன் வணிக நிறுவனத்தினர், முன்வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஊடக சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வுக்கு மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினர், வேல்முருகன் வியாபார நிலையத்தின் முகாமையாளர் காசிபிள்ளை சதீஷ்குமார், மட்டக்களப்பு மாவட்ட உதவி பந்தாட்ட சங்கப் பிரதிநிதிகள், பங்கு பெற்றும் பாடசாலையின் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சுற்று போட்டியில் முதலாம் இடத்தை பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும். இரண்டாவது ஆக வெற்றி கொள்ளும் அணிக்கு 75 ஆயிரம் ரூபாயும். மூன்றாவதாக வரும் அணிக்கு 50,000 ருபாவும் பரிசல்களாக வழங்க நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக பெண்கள் அணி பங்குபெற்றும் முதலாவது உதைப்பந்தாட்ட சுற்று போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: