3 Jul 2023

இலங்கையில் அதிகூடிய வறுமைக்குட்பட்ட வவுணதீவுப் பிரதேசத்தை முழுமையாக நிருவகிக்கக் கூடிய கல்வியியலாளர்கள் இந்தப் பிரதேசத்திலிருந்தே உருவாக வேண்டும் உதவி பிரதேச செலாளர் சுபா சதாகரன்.

SHARE

இலங்கையில் அதிகூடிய வறுமைக்குட்பட்ட வவுணதீவுப் பிரதேசத்தை  முழுமையாக நிருவகிக்கக் கூடிய கல்வியியலாளர்கள் இந்தப் பிரதேசத்திலிருந்தே உருவாக வேண்டும் உதவி பிரதேச செலாளர் சுபா சதாகரன்.

இலங்கையில் அதிகூடிய வறுமைக்குட்பட்ட வவுணதீவுப் பிரதேசத்தை  முழுமையாக நிருவகிக்கக் கூடிய கல்வியியலாளர்கள் இந்தப் பிரதேசத்திலிருந்தே உருவாக வேண்டும் என தான் விரும்பி அதற்கேற்ப இளைஞர் யுவதிகளை ஊக்குவித்து வருவதாக மட்டக்களப்பு வவுணதீவுப்  உதவிச் பிரதேச செலாளர் சுபா சதாகரன் தெரிவித்தார்.

அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பல்வேறு திட்ட அமுலாக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்ட இளைஞர் யுவதிகளில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திச் செயல்பட்ட முன்னோடி இளைஞர்களை பாராட்டி ஊக்குவித்து உதவியளிக்கும் நிகழ்வு வவுணதீவுப் பிரதேச செயலக பொது மண்டபத்தில் புதன்கிழமை (28.06.2023) இடம்பெற்றது

 அதன் பிரதம நிறைவேற்றதிகாரி  கே.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிச் செயலாளர் சுபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முன்னோடி இளைஞர் யுவதிகளைக் கௌரவித்து உதவி ஊக்கமளிக்கும் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றினார்.

வவுணதீவுப் பிரதேசத்தை அது பின்தங்கிய பிரதேசமாகையால் படுவான்கரை பிரதேசம் என்றும் அழைப்பதுண்டு. இது இலங்கையின் வறுமையான முதலாவது பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் இங்கு நிறைய வளங்கள் விரவிக் கிடக்கின்றன. இந்த வளங்களை இங்குள்ள இளைஞர் யுவதிகள் பயன்படுத்தி முன்னேறக் கூடியதான திட்டங்களை அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனம் அமுலாக்கி வருவது இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இவ்வாண்டு கல்வி அடைவு மட்டங்களிலும் வவுணதீவுப் பிரதேச மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்கள். அதன் பெறுபேறாக 20 மாணவர்கள் பல்கலைக்கழக நுளைவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதுவொரு சாதகமான மாற்றமாகும். கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றம்தான் நிலைபேறான அபிவிருத்தியாக இருக்கும். எனவே, எதிர் காலத்தில் இந்த வவுணதீவுப் பிரதேசத்தை முழுமையாக நிருவகித்துப் பரிபாலனம் செய்யக் கூடிய கல்வியியலாளர்கள் இங்கிருந்தே உருவாக வேண்டும். அதற்காக இங்குள்ள அரச திணைக்கள கூட்டுத்தாபன அலுவலர்கள் பெற்றோரகள்; மாணவர்கள் அதுபோன்று சமூக அக்கறையுள்ள சகலரும் ஒருமித்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் அரசாங்க உதவிகளை எதிர்பார்த்திருக்காக சுய சார்பு நிலைமைக்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்என்றார்.

இந்நிகழ்வில் 41 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் முனைவோருக்கான உதவு ஊக்கத் தொகையாக சுமார் 40 ஆயிரம் ரூபாய் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

நிகழ்வில் வவுணதீவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் கலாராணி, அக்ஷன் யுனிற்றி லங்காவின் இயக்குநர் சபைத் தலைவர் ஜே. மகேஸ்வரி, அதன் திட்ட இணைப்பாளர் அனுலா உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் பிரதேச பொது மக்களும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.



 

SHARE

Author: verified_user

0 Comments: