வன்னி ஹோப் நிறுவனத்தினால் திறன் வகுப்பறை திறந்து வைப்பு.
சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி விவேகானந்தா மகாவித்தியத்தில் திறன் (ஸ்ர்மாட்) வகுப்பறை ஒன்று செவ்வாய்கிழமை(20.06.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறப் பாடசாலை மாணவர்களும் டிஜிட்டல் வசதியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனும் நோக்குடன் அவுஸ்ரேலியாவிலுள்ள அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளை குடும்பத்தினரதும்> மற்றும் அமெரிக்காவிலுள்ள நல்லையா பவுண்டேசனதும் முழு நிதி அனுசரணையில் வன்னிஹோப் இலங்கை அலுவலகத்தினால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு இலெட்சத்திற்கு அதிகமான நிதிப் பங்களிப்பில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் எம்.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னிஹோப் அவுஸ்ரோலியா நிறுவனத்தின் இங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.முகமட் பாரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
மேலும் இந்கழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாஸீர் அறபாத் முகைடீன்> கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதாயாளன்> நிதி வழங்குனர் சார்பில் அப்பாடசாலையின் முன்னாள் அதிபரின் துணைவியார் திருமதி. வேலுப்பிள்ளை> மற்றும் வன்னிஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர்களான எஸ்.ரேகா> ஆர்.கணேசமூர்த்தி> எம்.யு.முகமட்.வஸீம்> மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள்> பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ள தமது கிராமப் புறப் பாடசாலையை தெரிவு செய்து மிகப் பொரியதொரு நிதியை ஒதுக்கீடு செய்து கிராமப்புறப் பாடசாலை மாணவர்களும் ஸ்மார்ட் கல்வியைத் தொடர்வதற்கு உதவி செய்த வன்னிஹோப் நிறுவனத்திற்கு இதன்போது பாடசாலைச் சமூகம் தமது நன்றியறிதலைத் தெரிவித்தது.
0 Comments:
Post a Comment