வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.
இலங்கையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும், வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாலையர்கட்டு மற்றும் கோவில்போரதீவு ஆகிய இரு இடங்களில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரண்டு வீடுகள் உத்தியோக பூர்வமாக வன்னி ஹோப் நிறுவனத்தின் அதிகாரிகளால் செவ்வாய்கிழமை(20.06.2023) உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
குறித்த இரு வீடுகளும் ஐக்கிய இராஜியத்தில் வாழ்ந்த வைத்தியலிங்கம் சிவஜோதி மற்றும் லோகேஸ்வரி சிவஜோதி அவர்களின் ஞாபகாரத்தமாக அவர்களின் பிளை்ளைகளினாலும் மற்றைய வீடு ஐக்கிய அமெரிக்காவில் வசித்துவரும் சுதாகர் வாமதேவன் அவர்களினால் சுவாமிநாதன் வாமதேவன் அவரர்களின் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்டது.
இதன்போது வன்னிஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ரி.எம். பாரீஸ், மற்றும் அதன் இணைப்பாளர்கள், போரதீவுப் பற்று பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயற்பட்டு வரும் வன்னிஹோப் நிறுவனம் வழக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எதுவித வேறுபாடுகளின்றி சேவை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment