வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 100 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18.06.2023) வரக்காப்பொல ஆர்.ஜே.வரவேட்பு மண்டபத்தில் சமூக ஆர்வலரும் சாந்தா மரியால் குணதீபன் தலமையில் இடம்பெற்றது.
வரக்காப்பொல சமூகம் வன்னி ஹோப் நிறுவனத்திற்கு வரக்காப்பொல பிரதேசத்தில் பின்தங்கிய ஐந்து பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த உதவிகள் வழங்கப்பட்டன. வன்னி ஹோப் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் கல்வி நலனுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் பல்வேறு வகையான உதவிச் சேவைகளை ஆற்றிவருகின்றது. குறிப்பாக பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள், கிராமப்புற பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் வசதிகள், கற்றல் உபகரணங்கள், மாணவர்களுக்கான வழிப்புணர்வுகள், கணிணிகூடங்கள் நிறுவுதல் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் இன, மத, பிரதேச வேறுபாடின்றி செய்து வருகின்றது.
அந்த இடிப்படையில் அம்பேபுஸ்ஸ தமிழ் வித்தியாலயம், பனான தமிழ் வித்தியாலயம், தஸ்னாவ தமிழ் வித்தியாலயம், மாதெனிய தமிழ் வித்தியாலயம், நியந்துருபொல தமிழ் வித்தியாலயம் ஆகிய ஐந்து பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கே இந்த கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர்களான என்.முரளீதரன், எம்.ரீ. எம். பாரீஸ், விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வரக்காப்பொல பிரதேச சமூக ஆர்வலர்கள், கோயில் நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்னகள் பல பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
0 Comments:
Post a Comment