1 Mar 2023

ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் மட்டடக்களப்பு ஓந்தாச்சிமடம் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து .பொ.சாதாரண பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு  உயர்தரக்கல்வியினை தொடர்வதற்கான கற்றல் உபகரணம் உதவி வழங்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி. .பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை(01) நடைபெற்றது.

இந் நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து அவ்அமைப்பு சார்பாக வருகைதந்த கோ.ஜனபாலசுந்தரம், சம்மாந்துறை கல்வி வலய உதவிக் கல்வி பணிப்பாளர் வி.ரீ.சகாதேவராஜா, மற்றும் பாடசாலை முன்னாள் அதிபர் சற்குணராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையிலிருந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற  44 மாணவர்கள் உயர்தரம் கற்று வெளியேறும் வரைக்குமான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது இதில் வசதி குறைந்த  12 மாணவவர்களுக்கு  பிரத்தியேக வகுப்புக்கு  தேவையான  மாதாந்த கட்டணத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள்  மேற் கொள்ளப்பட்டது இம்மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களுக்கும் இதன்போது பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டன.





SHARE

Author: verified_user

0 Comments: